டெல்லியில் போராடி வந்த விவசாயி தற்கொலை! கடிதத்தில் இருந்த நெஞ்சை உருக்கும் கடைசி ஆசை: கலங்க வைக்கும் வீடியோ
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளில் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி ஒருவர், காசிப்பூர்-உத்தரபிரதேச எல்லையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் பிலாஸ்பூரைச் சேர்ந்த சர்தார் காஷ்மீர் சிங் லாடி என அடையாளம் காணப்பட்ட விவசாயி, காசிப்பூர் எல்லையில் உள்ள கழிப்பறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்தார் காஷ்மீர் சிங் லாடி தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த கடிதத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்களின் தற்போதைய நிலைக்கு பொறுப்பேற்கவில்லை என்றும் சர்தார் காஷ்மீர் சிங் லாடி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை
— Niranjan kumar (@niranjan2428) January 2, 2021
கழிவறையில் பிணமாக இருந்தவரை காவல்துறை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
புது ஆண்டின் 2வது நாளில் இப்படி ஒரு சோகம்
என்று தீரும் இந்த கொடுமைகள்
???? pic.twitter.com/KMbefV6XGF
மேலும், தனது இறுதிச் சடங்குகள் உ.பி.-டெல்லி எல்லையில் தனது பேரக்குழந்தைகளால் நடத்தப்பட வேண்டும் என்று கடிதத்தில் அவர் தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
சர்தார் காஷ்மீர் சிங் லாடி பேரக்குழந்தைகளும் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.