ஒரே நாளில் ஐந்து பிள்ளைகளை அநாதரவாக்கிய அபூர்வ விபத்து... காற்றே வீசாதபோது முறிந்து விழுந்த 175 அடி உயர மரம்
அமெரிக்காவில் அபூர்வ விபத்து ஒன்றில் ஐந்து குழந்தைகளை அநாதரவாக விட்டு விட்டு பலியாகினர் ஒரு தம்பதியர்.
Jessica (45) மற்றும் Jake Woodruff (36) என்னும் அந்த தம்பதியர், Jessicaவின் 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, ஆண்டுதோறும் தாங்கள் செய்யும் வழக்கத்தின்படியே கலிபோர்னியா கடற்கரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, காற்றே வீசாத நிலையிலும், 175 அடி உயர மரம் ஒன்று திடீரென முறிந்து, தம்பதியர் பயணித்த கார் மீது விழுந்துள்ளது.
இந்த கோர விபத்தில் கார் நசுங்கியதில், காரில் பயணித்த Jessica மற்றும் Jake இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
இப்படி ஒரு விபத்தை இதுவரை பார்த்ததில்லை என்கிறார்கள் பொலிசார். நான் 19 வருடங்களாக பொலிஸ் துறையில் பணியாற்றுகிறேன், மரங்கள் விழுந்திருக்கிறது,
ஆனால், இப்படி ஒரு அபூர்வ விபத்தை நான் பார்த்ததில்லை என்கிறார் Gonzalez என்னும் பொலிஸ் அதிகாரி.
Jessica மற்றும் Jake தம்பதி, Megan, Evan, Casey, Allie மற்றும் Chelsea என்னும் ஐந்து பிள்ளைகளை அநாதரவாக விட்டுச் சென்றுள்ளார்கள் என்பது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தும் செய்தி!



