சிறிய அளவிலான பணத்துக்கு சாப்பிட்டு விட்டு லட்சக்கணக்கில் டிப்ஸ் வழங்கிய வாடிக்கையாளர்! எங்கு தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள உணவு விடுதியில் $29 பணத்துக்கு சாப்பிட்டுவிட்டு $2,020 பணத்தை டிப்ஸாக கொடுத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளோரிடாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக உணவு விடுதியின் மேலாளர் Robert Godfrey பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், வாடிக்கையாளர் ஒருவர் $29 பணத்துக்கு சாப்பிட்டுவிட்டு $2,020 பணத்தை டிப்ஸாக கொடுத்துவிட்டு சென்றார்.
அந்த டிப்ஸ் பணத்தில் ஒவ்வொரு ஊழியருக்கும் தலா $80 அன்பளிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு மத்தியிலும் சிறப்பாக சேவை செய்த ஊழியர்களை பாராட்டும் வகையில் இந்த டிப்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.