பூனையை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்.., இந்திய தலைநகர் வரை போஸ்டர்
தொலைந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் போஸ்டர் ஒட்டி தேடி வருகின்றார்.
பொதுவாக மனிதர்கள் யாராவது காணவில்லை என்றால் அவர்களை போஸ்டர் ஒட்டி தேடுவதை பார்த்திருப்போம். முக்கியமாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மனநலன் குன்றியோர் ஆகியோர் தொலைந்து விட்டால் அவர்களது புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டி தேடுவார்கள்.
ஆனால், இங்கு ஒரு உரிமையாளர் தனது வீட்டில் உள்ள செல்லப்பிராணியை காணவில்லை என்று போஸ்டர் ஒட்டி தேடி வருகிறார்.
பூனையை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், நொய்டாவில் செக்டார் 62 பகுதியில் வசிக்கும் அஜய் குமார் என்பவர் தனது செல்லப் பிராணியைத் தேடி டெல்லி வரை போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
அந்த போஸ்டரில் பூனையின் அழகான புகைப்படம் மற்றும் அதன் அடையாள விவரங்கள் ஆகியவற்றுடன் சன்மானத்தொகை ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.
नोएडा में इस बिल्ली को खोजिए, 1 लाख इनाम पाइए –
— Sachin Gupta (@SachinGuptaUP) January 8, 2024
सेक्टर 62 से पर्शियन नस्ल की ये पालतू बिल्ली 24 दिसंबर से लापता है। पेट मलिक अजय कुमार ने इसे ढूंढकर लाने वाले को इनाम देने के पोस्टर लगवाए हैं। pic.twitter.com/Sy6qk6gGQ9
ஒன்றரை வயதாகும் ஆண் பாரசீகப் பூனையை கண்டுபிடித்து தருபவர் அல்லது இருப்பிடம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பூனையின் அங்க அடையாளமாக கழுத்தில் வெள்ளை முடி இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்த பூனையை போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |