புத்தாண்டன்று திருமணத்தில் ராக்கெட் தாக்குதல்! வெடித்து சிதறிய மண்டபம்: நொடியில் நடந்த கொடூர வேதனையான சம்பவம்
ஏமானில் புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற திருமணத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hodeida நகரத்திலே இக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் ஐந்து பெண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Hodeida விமான நிலையத்திற்கு அருகிலுள்ள திருமண மண்டபத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமும் ஹவுத்தி போராளிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டினர் வருகின்றனர்.
குறைந்தது 26 பேர் கொல்லப்பட்ட ஏடன் விமான நிலையத்தை உலுக்கிய குண்டுவெடிப்பு நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிடும் ஐ.நா. நிதியுதவியளிக்கும் கூட்டு ஆணையத்தின் அரசாங்க பிரதிநிதி General Sadek Douid, Hodeida தாக்குதலை கண்டித்தார், மேலும் இது குடிமக்களுக்கு எதிராக ஹவுத்திகள் செய்த மோசமான குற்றம் என்று கூறினார்.
Hodeida-வில் ஹவுத்தி குழுவால் நியமிக்கப்பட்ட ஆளுநர் முகமது அயாச்சே, ஆக்கிரமிப்பு சக்திகள் ஒருபோதும் தாங்கள் செய்த குற்றங்களுக்க மற்றவர்களின் மேல் பழி போட தயங்குவதில்லை என்று கூறினார்.