நிலவில் இருந்த பள்ளத்தை அறிந்து நகர்ந்து சென்ற ரோவர்! புகைப்படம் வெளியிட்ட இஸ்ரோ
நிலவின் மேற்பரப்பில் இருந்த பள்ளத்தை முன்கூட்டியே அறிந்து நகர்ந்து சென்ற பிரக்யான் ரோவரின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திராயன் 3 விண்கலம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
அதன்படி, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு மாலை சந்திரயான்-3 விண்கத்தின் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. பின்னர், சில மணி நேரங்களுக்கு அடுத்து லேண்டரில் இருந்த ரோவர் வாகனமும் நிலவில் தரையிறங்கப்பட்டது. அதற்கான வீடியோவும் இஸ்ரோ வெளியிட்டது.
அதன்படி, நிலவின் மண்ணில் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வு செய்து வருகிறது.
பள்ளத்தை அறிந்த ரோவர்
இந்நிலையில், நிலவின் மேற்பரப்பில் இருந்த 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தை முக்கூட்டியே அறிந்து ரோவர் அதனை தவிர்த்துள்ளது.
இதனை, 3 மீட்டர் தூரத்திற்கு முன்பே கண்டறிந்த ரோவர் சாதுர்யமாக நகர்ந்து சமதள பாதையில் சென்றுள்ளது என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்யப்படுவதாக இஸ்ரோ கூறியது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 28, 2023
On August 27, 2023, the Rover came across a 4-meter diameter crater positioned 3 meters ahead of its location.
The Rover was commanded to retrace the path.
It's now safely heading on a new path.#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/QfOmqDYvSF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |