உக்ரைன் தலைநகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யா போர் விமானம்.. குடியிருப்பு பகுதியில் விழுந்து தீப்பிடித்த பரபரப்பு காட்சி
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது.
நேற்று உக்ரைனுக்கு எதிராக முழுமையான போரை தொடங்கியுள்ள ரஷ்யா, 3 திசைகளிலிருந்து சரமாரியாக தாக்குதல் நடத்தி நகரங்களை கைப்பற்றி வருகிறது.
ரஷ்யா படைகள் தொடர்ந்து உக்ரைன் தலைநகரை நோக்கி முன்னேற வருகின்றனர்.
ரஷ்யா உக்ரைனை கைப்பற்றும் பட்சத்தில், அங்கு ரஷ்யா ஆதரவுடைய நபரை அதிபராக நியமித்துவிட்டு, புடின் படைகளை திரும்பப் பெறுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகரில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய போர் விமானத்தை உக்ரேனிய வான் பாதுகாப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது.
இச்சம்பவத்தை உக்ரேனியர் ஒருவர் தனது குடியிருப்பில் இருந்த படி படமெடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து தீ பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
A #Russian aircraft shot down by #Ukrainian air defenses falls on residential areas in #Kyiv. pic.twitter.com/kNR9yFwSGv
— NEXTA (@nexta_tv) February 25, 2022