'இலவச உள்ளாடை திட்டம்' என இளம் பெண்களை குறிவைத்து ஆசாமி செய்த செயல்! விசாரணையில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
குஜராத்தில் 'இலவச உள்ளாடை திட்டம்' எனக் கூறி இளம்பெண்களிடம் அந்தரங்க புகைப்படங்களைக் கேட்டு பாலியல் தொல்லை கொடுத்துவந்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.
இந்திய மாநிலம் குஜராத்தின் தலைநகரான அகமதாபாத்தில், 18 வயது மிக்க ஒரு இளம் பெண் காவல்துறையை நாடியுள்ளார்.
அப்பெண், தனக்கு ஒருவர் போன் செய்து 'நீங்கள் எங்கள் இலவச உள்ளாடை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள்' எனக் கூறியதாகவும், பின்னர் தொடந்து போனில் அழைத்து தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்ப சொல்லி கேட்டு தொல்லை செய்துவந்ததாகவும் புகார் அளித்தார்.
அவர் புகார் அளித்ததன்பேரில், குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை ட்ரெஸ் செய்து, அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடாவில் வசிக்கும் 25 வயது மிக்க சூரஜ் கவ்லே என்பவரை பொலிஸ் கைது செய்தனர்.
விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்த அஹமதாபாத் பொலிஸ், சூரஜிடமிருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை பெற்றனர்.
இந்தப் பெண்ணை போன்று, பல பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்துள்ளான் சூரஜ்.
பல இளம் பெண்களுக்கு தோலைபேசியில் அழைத்து, விளம்பரத்திற்காக இலவசமாக உள்ளாடைகளைத் தருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய பெண்களிடம் அவர்களது சுய விவரங்களை தருமாறும் அவர் கோரியிருக்கிறார்.
பின்னர், இலவச உள்ளாடைகள் திட்டத்திற்கு நீங்கள் தகுதியானவர்கள் எனக் கூறி பதிலுக்கு அவர்களின் அந்தரங்க புகைப்படங்களைக் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு தொலைபேசியில் அழைப்பத் உமட்டுமல்லாமல், வாட்ஸஅப் மற்றும் பிற சமூக வலைதள பக்கங்களிலும் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, போலியான கடன் திட்டங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மேலும் ஒரு மோசடியில் சூரஜ் ஈடுபட்டுள்ளார் என்பதை சைபர் க்ரைம் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் உள்ள விளம்பரத்தை நம்பி, பணத் தேவையில் உள்ள நபர்கள் இவரை தொடர்பு கொண்டால், லட்சக்கணக்கில் கடன் தருவதாகக் கூறி, அதற்கான முன் மாதாந்திர வட்டித் தொகையை தன்னுடைய பே-டிஎம் கணக்கிற்கு அனுப்ப சொல்லி பண மோசடி செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், சூரஜ் மீது 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி, 354 டி (பின் தொடர்ந்தல்), 500 (மான நஷ்டம் ஏற்படுத்துதல் மற்றும் ஐடி பிரிவு ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.