இந்திய மாநிலம் ஒன்றில் தொடர்ச்சியாக ஒரே மாதிரியான கொலைகள்: அச்சத்தில் பொதுமக்கள்...
இந்திய மாநிலம் ஒன்றில் ஒரேமாதிரி நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
சீரியல் கில்லர் ஒருவர் நடமாடுவதாக அச்சத்தில் உறைந்துள்ளார்கள் பொதுமக்கள்.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஒரேமாதிரி நான்கு பேர் கொல்லப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் சீரியல் கில்லர் ஒருவர் நடமாடுவதாக மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
Sagar என்னும் பகுதியில் இதுவரை நான்கு பேர் கல் அல்லது சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
Credit: Bhopal Police
கொல்லப்பட்ட நான்கு பேருமே செக்யூரிட்டி கார்டு அல்லது வாட்ச்மேனாக பணிபுரிந்துவந்தவர்கள் ஆவர்.
விடயம் என்னவென்றால், கொல்லப்பட்ட யாரிடமிருந்தும் எந்தப் பொருளும் திருடப்படவில்லை.
இதற்கிடையில், CCTV கமெரா ஒன்றில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
குற்றவாளியைக் கைது செய்ய உதவுவோருக்கு இந்திய மதிப்பில் 20,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.