பிரித்தானிய மன்னராக சார்லஸ் முடிசூடும் நாள் இளவரசர் ஹரிக்கும் ஒரு விசேஷமான நாள் தெரியுமா?
பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் அடுத்த ஆண்டு முடிசூட இருக்கிறார்.
அவர் முடிசூடும் நாள் பல சிறப்பம்சங்களைக் கொண்ட நாள் ஆகும்.
பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் அடுத்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, மே மாதம் 6ஆம் திகதி முடிசூட இருக்கிறார்.
அவர் முடிசூடும் நாள் பிரித்தானிய வரலாற்றில் பல சிறப்பம்சங்களைக் கொண்ட நாள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், இதே மே 6ஆம் திகதிதான், மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் தந்தையான மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னராக பதவியேற்றார்.
Image: 2016 Getty Images
அத்துடன், இதே மே 6ஆம் திகதிதான் மகாராணியாரின் சகோதரியான இளவரசி மார்கரட்டின் திருமணமும் நடந்தது.
அதைவிட முக்கியமான விடயம், அந்த நாள் மன்னர் சார்லசுக்கு எப்படி மனதுக்கு பிடித்த ஒரு நாளோ, அதேபோல, அவரது மகனான இளவரசர் ஹரி, மேகனுக்கும் அது ஒரு முக்கியமான நாள் ஆகும்.
ஆம், அன்றுதான் மன்னர் சார்லசின் பேரனும், இளவரசர் ஹரியின் மகனுமான குட்டி இளவரசர் ஆர்ச்சியின் நான்காவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
image - Getty Images
Bettmann/Getty Images