கமலா ஹாரிஸ் வீட்டு வாசலில் நின்ற சந்தேக நபர்; பிடித்து சோதனை செய்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் வீட்டு வாசலில் துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் உத்தியோகபூர்வ இல்லமான அமெரிக்க கடற்படை ஆய்வகத்திற்கு வெளியே புதன்கிழமை மதியம் 12 மணியளவில் Texas-ஐ சேர்ந்த நபர் ஒருவர் தனது காருடன் நின்றுகொண்டிருத்தார்.
சந்தேகமடைந்த வாஷிங்டன் டி.சி பொலிஸார் அவரை சோதனை செய்ததில், அதிர்ச்சியூட்டும் விதமாக அவரது வாகனத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அந்த நபரை பொலிஸார் கைது செய்தனர். அவரது பெயர் Paul Murray (31) என தெரியவந்தது. Murray மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஒரு ஆபத்தான ஆயுதத்தை எடுத்துச் செல்வது, ஒரு வணிகத்திற்கு வெளியே ஒரு துப்பாக்கி அல்லது துப்பாக்கியை எடுத்துச் செல்வது, பதிவு செய்யப்படாத வெடிமருந்துகளை வைத்திருத்தல் மற்றும் ஒரு பெரிய திறன் கொண்ட வெடிமருந்து தீவன சாதனம் வைத்திருத்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.