என்னைக் கைது செய்யப்போகிறார்கள்... நேரலையில் பதறிய சுவிஸ் ஊடகவியலாளர்: விவரம் செய்திக்குள்
சுவிஸ் ஊடகவியலாளர் ஒருவர் நேரலையில் இருக்கும்போது திடீரென சீனப்பொலிசார் மூன்று பேர் அவரை சூழ்ந்துகொண்டதால் பதற்றம் அடைந்தார்.
நேரலையில் இருந்த ஊடகவியலாளர்
சீனாவில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த சுவிஸ் ஊடகவியலாளரான Michael Peuker நேரலையில் இருக்கும்போது திடீரென பொலிசார் மூன்று பேர் அவரை சூழ்ந்துகொண்டதால் பதற்றம் அடைந்தார்.
தன்னைக் கைது செய்து அழைத்துச் செல்லப்போகிறார்கள் என்று எண்ணிய Michael, நேரலையிலேயே, இதற்குப் பிறகு நான் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
image - Representational
நடந்தது என்ன?
சுவிஸ் தேசிய ஒளிபரப்பு அமைப்பின் ஊடகவியலாளரான Michael, சீனாவில் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து நேரலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது சீனப்பொலிசார் மூன்றுபேர் அவரை சூழ்ந்துகொண்டுள்ளனர்.
ஆனால், தான் ஒரு ஊடகவியலாளர் என்று தன் அடையாளங்களைக் காட்டியதும், தன்னையும் தன்னுடனிருந்த கமெராமேனையும் பொலிசார் விட்டுவிட்டதாக பின்னர் தெரிவித்துள்ளார் Michael.
ஞாயிற்றுக்கிழமையன்று, இதேபோல செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரைக் கைது செய்த சீனப்பொலிசார், அவரைத் தாக்கி, கைது செய்ததாகவும், பலமணி நேரம் அவரை காவலில் வைத்திருந்தபின் விடுவித்ததாகவும் பிபிசி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.