கனடாவில் மாயமான தமிழர்! அவர் கடைசியாக காணப்பட்ட இடம் எது? புகைப்படத்துடன் பொலிசார் முக்கிய தகவல்
கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோ பொலிசார் இத்தகவலை தங்களின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி ராஜதுரை கஜேந்திரன் என்ற 56 வயது நபர் கடந்த 14ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு காணாமல் போயிருக்கிறார்.
அவர் கடைசியாக Kennedy Rd & Eglinton Ave E பகுதியில் காணப்பட்டுள்ளார்.
ராஜதுரையின் உயரம் 5 அடி 9 அங்குலம் என பொலிசார் தெரிவித்துள்ளதோடு, அவர் குறித்த சில அங்க அடையாளங்களையும் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன போது ராஜதுரை கருப்பு நிற கோர்ட், கருப்பு நிற தொப்பி அணிந்திருந்தார் என கூறப்பட்டுள்ளது.
அவர் குறித்த தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
MISSING MAN:
— Toronto Police Operations (@TPSOperations) February 15, 2021
Rajadurai Gajendran, 56
- last seen on Feb. 14, at 5:30 p.m., in the Kennedy Rd & Eglinton Ave E area
- he is described as 5'9", 150 lbs., brown eyes, bald, clean shaven
- last seen wearing a black coat, black hat and black slippers#GO289672
^al pic.twitter.com/jDMDvgL27u