ISRO வேலையை விட்டு சொந்த நிறுவனம் தொடங்கிய தமிழர்! பிஸ்னஸ் லாபம் மட்டுமே கோடிகளில்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் வேலை செய்த தமிழர் ஒருவர் தனது வேலையை விட்டுவிட்டு சொந்த நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
யார் அவர்?
தொழில் முனைவோரான ராமபத்ரன் சுந்தரம் என்பவர் கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்துள்ளார். அப்போது ஓட்டுனரிடம் நடத்திய கலந்துரையாடலை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் தனது கால் டாக்சி ஓட்டுநர் உதயகுமார், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் வேலை செய்ததை அறிந்து ஆச்சரியமடைந்ததை கூறியுள்ளார்.
புள்ளியியல் பிரிவில் பிஹெச்டி முடித்த உதயகுமார் இஸ்ரோவில் வேலை செய்துள்ளார். இவருக்கு, சொந்தமாக டாக்ஸி நிறுவனம் தொடங்க வேண்டும் என்று ஆசை இருந்ததால் தான் பார்த்த இஸ்ரோ வேலையை உதறி தள்ளியுள்ளார்.
மேலும், உதயகுமாரின் வாழ்க்கை தன்னை ஊக்குவிப்பதாகவும் ராமபத்ரன் சுந்தரம் கூறியுள்ளார்.
தமிழக மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர், இஸ்ரோவில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக கடினமாக படித்து பணிக்கு சேர்ந்தார்.
அங்கு, ராக்கெட்டுகளுக்கான திரவ எரிபொருட்களின் அடர்த்தியை கணக்கிட்டு கூறும் வேலையை செய்து வந்தார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால்.., தற்போது அதன் மதிப்பு எவ்வளவு?
ஆனால், இவர் தன்னுடைய வேலையை விட்டு கடந்த 2017 -ம் ஆண்டு நண்பர்களின் உதவியோடு பெற்றோர் சுகுமாரன் மற்றும் துளசியின் பெயரில் எஸ் டி கேப்ஸ் (ST CABS) என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனமானது ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு வருமானத்தில் 70 சதவீத பங்குகளை வழங்குகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |