17 வயதில் காதலில் விழுந்த மாணவி! வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்... பின்னர் நடந்த விபரீதம்
தமிழகத்தில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து வாலிபர் மிரட்டியதால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் வேம்பனூர் சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பாக்கியலட்சுமி (17). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நேற்று பிரேத பரிசோதனை முடித்து உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், பாக்கியலட்சுமி தற்கொலை செய்வதற்கு முன், ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது.
