வெகுகாலமாக திருமண கனவில் இருந்த நபரை தேடி வந்த அழகிய பெண்! திருமணமான அடுத்தநாளில் காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் திருமணம் நடந்த அடுத்த நாளே மனைவி வீட்டில் இருந்த பணம், நகைகளுடன் ஓட்டம் பிடித்தது கணவனை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் ஜெயரமோரா கிராமத்தை சேர்ந்தவர் சந்து ஜோகி. இவர் திருமணத்துக்கு வெகுகாலமாக பெண் தேடியும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் குஷ்வா என்ற தரகர் ஜோகியை அணுகி, அழகான பெண் ஒருவரை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறினார்.
இதற்காக ஜோகி ரூ 60 ஆயிரம் பணத்தை அப்பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். எப்படியோ தனக்கு திருமணம் நடக்க போகிறது என்ற கனவில் பணத்தை கொடுத்த ஜோகிக்கு அவரை தேடி வந்த அப்பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் எளிமையான முறையில் நடந்தது. இந்த நிலையில் திருமணம் முடிந்த அடுத்த நாள் காலை தூங்கி எழுந்த ஜோகி மனைவி வீட்டில் இருந்து மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டில் இருந்த பணம், நகைகளை திருடி கொண்டு ஓடியதும் தெரியவந்தது.
இது குறித்து பொலிசில் அவர் புகார் அளித்தார்.
விசாரணையில் அப்பெண் இது போல ஏற்கனவே சிலரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து மோசடி பெண்ணையும் அவருக்கு உடந்தையாக இருந்த தரகரையும் பொலிசார் தேடி வருகின்றனர்.