பனிப்பாறையில் விழுந்து நொறுங்கிய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர்! 5 பேர் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று பனிப்பாறையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலாஸ்கா மாநிலத்தின் Anchorage நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள நிக் பனிப்பாறை பகுதியிலே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பனிச்சறுக்கு சுற்றுலாவுக்கான ஹெலிகாப்டரில், இரண்டு பனிச்சறுக்கு வழிகாட்டிகள், 3 சுற்றுலா பயணிகள் மற்றும் விமானி என மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவல் தகவல் கிடைத்ததும், அலாஸ்கா மாநில படைகள் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த நிக் பனிப்பாறை பகுதிக்கு விரைந்துள்ளனர்.
விபத்து நடந்த பகுதியிலிருந்து ஒருவரை மட்டும் உயிருடன் மீட்ட மீட்புக் குழுவினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்ட நபர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், விபத்து நடந்த பகுதியிலிருந்து ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
