அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக திருநங்கைக்கு பெரும் பதவி... அதிரடி மாற்றங்களை துவங்கினார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு முக்கிய பொறுப்பு அளித்து தன் அதிரடி நடவடிக்கைகளை துவங்கியுள்ளார்.
ஆம், Dr. Rachel Levine என்னும் திருநங்கையை ஜோ பைடன் அமெரிக்க துணை சுகாதாரச் செயலராக தேர்வு செய்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றில், அரசாங்கத்தில் திருநங்கை ஒருவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பு கொடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஜோ பைடன் வித்தியாசமான முறையில் மூத்த நிர்வாகிகள் பொறுப்புக்கு தலைவர்களை தொடர்ந்து தேர்வு செய்வதை Levineஇன் தேர்வும் உறுதி செய்துள்ளது.
குழந்தைகள் நலம் மற்றும் மனோநல பேராசிரியரான Levine பெனிசில்வேனியாவுக்கான காமன்வெல்த் பிரதிநிதியாக கொரோனா பரவலை திறம்பட எதிர்கொண்டவராவார்.
இதற்கிடையில், ஜோ பைடன் Levineஐ அமெரிக்க துணை சுகாதாரச் செயலராக முன்மொழிந்தாலும், அவரது தேர்வை அமெரிக்க செனேட் உறுதிசெய்யவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


