விஷம் கலந்த உணவை ஆதரவற்ற ஏழைகளுக்கு கொடுத்து வீடியோ எடுத்த கொடூரன்! வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
தெற்கு கலிபோர்னியா கடற்கரை நகரத்தில் தெருக்களில் வாழும் ஆதரவற்ற 8 பேருக்கு விஷம் கொடுத்த ஒரு நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள சான் ஆண்ட்ரியாஸைச் சேர்ந்த William Cable (38) விஷம் கொடுத்து கோலை செய்ய முயற்சித்தல், வயதான நபரைக் காயப்படுத்துதல் மற்றும் பிற மோசமான குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக ஆரஞ்சு கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
William Cable கடந்த மே மாதம், ஹண்டிங்டன் கடற்கரையில் வீடற்ற மக்களுக்கு oleoresin capsicum எனும் மிகவும் காரமான மிளகாயை கொண்ட உணவைக் கொடுத்துள்ளார்
. இந்த மிளகாய் பொலிசார் பயன்படுத்தும் பெப்பர் ஸ்பிரேவை விட இரண்டு மடங்கு வலிமையானது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிலருக்கு அவர்கள் "காரமான உணவு சவாலில்" பங்கேற்பதாகக் கூறப்பட்டதாகவும், ஒரு சிலருக்கு முன்கூட்டியே எதுவும் எச்சரிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது அவர்களில் 8 பேருக்கு நச்சு கலந்த வேறு உணவு மற்றும் பீர் வழங்கப்பட்டுள்ளது. அதனை சாப்பிட்ட மக்களுக்கு வலிப்பு போன்ற அறிகுறிகள், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாந்தி மற்றும் தீவிர வாய் மற்றும் வயிற்று வலி ஆகியவை ஏற்பட்டுள்ளது.
சிலர் தீவிரமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். William Cable அந்த ஆதரவற்ற மக்களை சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்திக்கொண்டதாகவும், விஷம் அருந்திய அவர்களின் வலியை வீடியோவாக பதிவு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் William Cable-ஐ ஜூன் மாதம் கைது செய்தனர்.
விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் Cable 19 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்திருக்க வேண்டியிருக்கும் என அவர்கள் கூறியிருந்தனர்.
அனால், இந்த வழக்கில் வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் William Cable-க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

