சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்; பொலிஸ் உட்பட 10 பேர் சுட்டுக் கொலை., அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலராடோ மாகாணத்தில் Boulder என்ற இடத்தில் இயங்கிவரும் King Soopers என்ற பல்பொருள் அங்காடியில் திங்கட்கிழமையன்று ஒரு மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.
அவர் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரை பொலிஸார் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் காவலில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடையிலிருந்து காலில் இரத்தம் வடிந்தபடி சட்டை அணியாத ஒரு நபரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் தான் சந்தேக நபரா என்பத்து குறித்து அதிகாரிகள் வெளியிடவில்லை. சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாகவும், இதுவரை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான நோக்கம் குறித்த தகவல்கள் தெரியவில்லை என Boulder பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் பலியான Eric Talley (51), 2010-ஆம் ஆண்டு முதல் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்ளின் விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.