சுவிஸில் 40 உயிர்களை பலிவாங்கிய சம்பவத்தில் 24 வயது பெண்: தெரிய வந்த அடையாளம்
சுவிட்சர்லாந்தில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட கொடிய தீ விபத்தில், 24 வயது பணிப்பெண் ஒருவரும் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
இரவு விடுதி சம்பவம்
சுவிஸ் ஓய்வு விடுதியில் ஏற்பட்ட கொடிய தீ விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர்.

Image: Oliver Arandel/Le Parisien/MAXPPP/Picture alliance
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது.
விபத்து ஏற்படுவதற்கு சில கணங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட காணொளியில் தலைக்கவசம் அணிந்திருந்த பெண் இறந்ததும் தெரியவந்தது.
அவர் 24 வயதான Cyane Panine என்றும், பணிப்பெண்ணான அவரை இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டப்பட்டபோது உரிமையாளர்கள் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளனர்.
போத்தல்களைக் கையில் பிடித்தபடி
சுவிஸ் செய்தித்தாளான டேஜஸ்-அன்ஸைஜர் பார்த்த விசாரணைப் பதிவுகளின்படி இது தெரிய வந்துள்ளது.
புகைப்படங்களும், காணொளிகளும் அந்த இளம் பெண், கூரை தீப்பிடிப்பதற்கு முன்பு மத்தாப்புகள் பொருத்தப்பட்ட இரண்டு ஷாம்பெயின் போத்தல்களைக் கையில் பிடித்தபடி, ஒரு சக ஊழியரின் தோள்களில் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன.
இந்தத் துயரம் குறித்த விரிவான விளக்கத்தை அளித்த ஜாக் மற்றும் ஜெசிகா மோரெட்டி ஆகியோர், Cyane Panine கடைசி நிமிடங்கள் அந்த மாலையின் முழுப் பயங்கரத்தையும் உள்ளடக்கியிருந்ததாகக் கூறினர்.
dailymail
@Jamie Wiseman for The Daily Mail
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |