காரில் என்னை வலுக்கட்டாயமாக ஏற்றி கொண்டு முன்பின் தெரியாத இடத்துக்கு சென்றார்! நடந்ததை கண்ணீருடன் விவரித்த இளம்பெண்
அமெரிக்காவில் இளம்பெண்ணை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்று துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் மெம்பீஸை சேர்ந்தவர் ஜேமி ஜென்கிங்ஸ்.
இவர் தான் பொலிசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் கூறுகையில், நான் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தேன்.
அப்போது காரில் வந்த ஜேமி, துப்பாக்கியை என் தலை மீது வைத்து காரில் ஏற சொன்னார். இதனால் பயந்து போன நான் காரில் அவர் வற்புறுத்தலால் ஏறினேன்.
பின்னர் முன்பின் தெரியாத ஆளில்லாத இடத்துக்கு என்னை அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துவிட்டு என்னை விட்டு சென்றுவிட்டார் என கூறினார்.
இதை தொடர்ந்தே பொலிசார் ஜேமியை கைது செய்தனர்.
அவர் மீது சில முக்கிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
