பிரித்தானியாவில் ஒரு பெண்ணை சாதரணமாக கைது செய்து சோதனை செய்த பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! விதிக்கப்பட்ட அபராதம்
பிரித்தானியாவில் பெண் ஒருவரை தெருச்சண்டைக்காக பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் போதைப் பொருளை தன்னுடைய பெண் உறுப்பில் மறைத்து வைத்திருந்ததை அறிந்து பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரித்தானியாவின் Worcestershire-ல் இருக்கும் Malvern பகுதியைச் சேர்ந்த Koura Freely என்ற 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் , கடந்த பெப்ரவரி மாதம் 15-ஆம் திகதி தெரு சண்டை காரணமாக பொலிசாரால் தேடப்பட்டார்.
அதன் பின் பொலிசார் அவரைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை விசாரித்து அதிகாரிகள் அவரை சோதனை செய்த போது, சுமார் 5 கிராம் மதிப்பு கொண்ட கஞ்சாவை அவர் தன்னுடைய பெண்னுறுப்பில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் அவர் அதை வேறொன்று என்று கூறி மறுத்துள்ளார். முதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், அதன் பின் போதைப் பொருள் வைத்திருப்பதற்காக குற்றம்சாட்டப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு, பயத்தில் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு 50 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவரால் பாதிக்கப்பட்ட நபருக்கு(தெருசண்டை) தேவையான கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

