விஜய் கட்சியில் தீவிரமாக பணியாற்றிய பெண்.., செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைவு
தமிழக வெற்றி கழகத்தில் தீவிரமாக பணியாற்றிய வைஷ்ணவி, செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இணைந்தார்
தமிழக மாவட்டமான கோவை, கவுண்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர் தமிழக வெற்றி கழக கட்சியில் தீவிரமான பணியாற்றி வந்தார்.
இவரை தமிழக வெற்றி கழக கட்சியில் நிராகரிப்பதாக கூறி கட்சியில் இருந்து விலகுவதாக கூறி அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் மேலும் சில இளைஞர்களும் திமுகவில் இணைந்தனர்.
இது குறித்து செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு முன்னேறிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையே தேவை என்று உணர்ந்து, கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி மற்றும் கவுண்டம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் ஜே.எஸ்.சரத் விக்னேஷ் ஏற்பாட்டில், கோவை மாநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்த வைஷ்ணவி தலைமையில் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் - இளம் பெண்கள் இன்று தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |