நீங்க வந்தாலும் இப்படி தான் செய்வீங்க! தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ராதிகாவை கேள்விகளால் தைரியமாக துளைத்த பெண் யார்?
தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகை ராதிகாவை மடக்கி பெண் ஒருவர் கேட்ட கேள்வி கேட்ட நிலையில் அதற்கு அவர் சரியாக பதில் சொல்ல முடியாமல் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளர் ஐஜேகே கட்சியின் முகம்மது இத்ரீஸை ஆதரித்து நடிகை ராதிகா திருவல்லிக்கேணி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திமுக வேட்பாளர் உதயநிதியை, அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காகவே சினிமாவிற்கு வந்தவர் என்றும் எந்த ஒரு சமூக சேவையும் செய்யாமல் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து விட்டதாகவும் ராதிகா குற்றஞ்சாட்டினார்.
இதுவரை ஊழலே செய்யாத அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ இருந்தால் என் முன்னால் கொண்டு வந்து நிறுத்துங்கள் என ராதிகா ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குறுக்கிட்டார்.
நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே போல தான் ஊழல் செய்வீர்கள் என்ற அவர் நீங்கள் ஊழல் செய்ய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ? என்று எதிர் கேள்வி எழுப்பினார்.
குடிதண்ணீர் குழாய்களில் புழுக்கள் வருகின்றது புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை என்று அந்த பெண் பொங்கியதால், எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் சரி செய்கிறோம் என்று கூறி ராதிகா அங்கிருந்து நழுவினார்.
அந்த பெண் மீனா, என்பதும் கிராமிய பாடகி அனிதா குப்புசாமியிடம் உதவியாளராக இருந்தவர் என்பதும் தெரியவந்தது. இப்படி பிரச்சாரம் செய்யும் பிரபலங்கள் எல்லாம் வேட்பாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்வார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.