ஆதார் அட்டை Update: இனியும் தகவலை மாற்றினால் பணம் அறிவிடப்படும் தெரியுமா?
இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு அத்தியாவசிய ஆவணமாகும்.
இது தனிப்பட்ட மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக அடையாளம் காணும் வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே இந்த ஆதார் அட்டையில் இருக்கும் விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, மற்றும் பிற அத்தியாவசிய விபரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதிசெய்துக்கொள்ள வேண்டும்.
ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக நீங்கள் ஆதார் அட்டையில் மாற்றத்தை செய்தால் உங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் (unique identification authority of india) குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த தகவலை நீங்கள் எத்தனை முறை மாற்றலாம் என தெரிந்துக்கொள்வோம்.
DOB
ஆதார் அட்டையில் இருக்கும் பிறந்த திகதியை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.
ஆதார் அட்டை வாங்கும் பொழுது அசலாக பதிவு செய்யப்பட்ட பிறந்த திகதியிலிருந்து 3 வருடங்கள் முன்னரோ பின்னரோ அனுமதிக்கப்படலாம்.
முகவரி
ஆதார அட்டையில் உங்களது முகவரியை மாற்றுவதற்கு எந்தவொரு வரம்பும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் மாற்றிக்கொள்ள முடியும்.
பெயர்
ஆதார அட்டையில் உங்களது பெயரை நீங்கள் இரண்டு முறை மாத்திரமே மாற்ற முடியும்.
பாலினம்
ஆதார அட்டையில் உங்களது பாலினத்தை ஒரு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
புகைப்படம்
ஆதார அட்டையை வைத்திருப்பவர்கள் தங்களது புகைப்படத்தை எந்தவொரு வரம்பும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.
குறிப்பிட்டுள்ள வரம்பில் இருந்து மீறினால்?
உங்களுக்கென வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் இருந்து மீறி விட்டீர்கள் என்றால், நீங்கள் exception handling procedure என்று அழைப்படும் ஒரு செயல்முறையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த சேவையை பெறுவதற்கு நீங்கள் UIDAI பிராந்திய அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது அவசியமாகும்.
ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை ஒருவர் மாற்றுவதற்கான இறுதி திகதி ஜூன் 14, 2024 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது இறுதி திகதி நீட்டிக்கப்பட்டு குடிமக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னர் நீங்கள் செய்யும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் அதற்கான குறிப்பிட்ட கட்டணம் அறவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |