ஆதாரில் இனி மொபைல் போன் மூலமே திருத்தங்கள் செய்யலாம் - எப்படி செய்வது?
இந்தியாவில், சிம் கார்டு வாங்குவது தொடங்கி வங்கி கணக்கு தொடங்க அரசின் திட்டங்களில் இணைய என பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமாக உள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் ஆதார் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் Aadhaar app என்ற புதிய செயலியை இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆதாரில் பெயர் திருத்தம், ஈமெயில் முகவரி மாற்றுவது, மொபைல் எண் மாற்றுவது உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
மொபைல் போன் மூலம் ஆதார் திருத்தம்
தற்போது இந்த செயலி மூலம், வீட்டில் இருந்தபடியே இந்த திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆதார் செயலியில் OTP மற்றும் முக அங்கீகாரம் (Face Authentication) மூலம் பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
அதில் My Aadhaar Update என்பதில், அதனை கிளிக் செய்தால், செல்போன் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்வது, இ-மெயில் முகவரி பதிவு போன்றவை இருக்கும்.

முதற்கட்டமாக மொபைல் எண்ணை இந்த செயலி மூலம் மாற்றிக்கொள்ள முடியும். விரைவில் மற்ற திருத்தங்களும் இந்த செயலி மூலம் மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
இதில் புதிய எண்ணை உள்ளிட்டு அதற்கு வரும் OTPயை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்கள் முக அங்கீகாரம் (Face Authentication) சோதிக்கப்படும்.

அதன் பின்னர், மொபைல் எண்ணை மாற்றிக்கொள்வதற்கான கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்திய பின்னர் உங்கள் மொபைல் எண்ணை மாற்றுவதற்கான நடைமுறை தொடங்கி விடும்.

மேலும், இனி எந்த சேவைக்காகவும் ஆதார் நகலை கையில் எடுத்துக்கொண்டு அலைய வேண்டியதில்லை. இந்த செயலியில் உள்ள QR Code காண்பித்தாலே போதுமானது.
சேவை வழங்குபவர்கள் அதனை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆதாரை உறுதி செய்துகொள்ளலாம். இதனால் நமது தனிப்பட்ட ஆதார் விவரங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மேலும், இதில் தங்களது குடும்பத்தினரின் ஆதார் விவரங்களையும் நிர்வகித்து கொள்ளலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |