ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம் - அக்டோபர் 1 முதல் இவர்களுக்கு முன்னுரிமை
ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம் ஒன்றை IRCTC அறிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு
இந்தியாவில், குறைந்த கட்டணம் மற்றும் சவுகரிமான பயணம் காரணமாக தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், ரயில் டிக்கெட் எளிதாக முன்பதிவு செய்ய முடிவதில்லை. பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்பனை முடிந்து விடும்.
முன்பதிவு தொடங்கியதும் ஏஜென்ட்கள் அனைத்து டிக்கெட்களையும் முன்பதிவு செய்து விடுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என IRCTC அறிவித்தது. தற்போது அதனை பொது முன்பதிவிற்கும் விரிவுபடுத்தியுள்ளது.
முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் கட்டாயம்
இதன்படி, இனி IRCTC செயலி அல்லது இணையதளம் மூலம் எந்த ஓரு ரயிலின் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதாரை தங்கள் கணக்குடன் இணைத்தவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
அதாவது டிக்கெட் முன்பதிவு 10 மணிக்கு தொடங்கினால், 10;15 வரை ஆதார் கணக்கை இணைந்தவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.
10:15க்கு பிறகு ஏஜென்ட்கள் மற்றும் ஆதார் கணக்கை இணைக்காதவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரயில் நிலைய கவுண்டர்களுக்கு நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, இந்த நேரக்கட்டுப்பாடு கிடையாது.
அக்டோபர் 1 ஆம் திகதி முதல் இந்த புதிய விதி அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |