விஜய் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளித்தாரா? - போட்டுடைத்த ஆதவ் அர்ஜுனா
விஜய் திமுகவிற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி இல்லையா என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக சிறப்பு பொதுக்குழு
தவெக தலைவர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டிலே, கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, தனது அறிக்கைகளிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தொடர்ந்து திமுக அரசையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்நிலையில், விஜய் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளித்தார், திமுகவிற்கு அந்த நன்றி இல்லை என வெக பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உரையாற்றினர்.
ஆதவ் அர்ஜுனா
இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "சூழ்ச்சி என்றால் என்னவென்று தெரியாத கட்சி நாங்கள். அதனை கரூரில் பார்த்து விட்டோம். தமிழகத்தில் பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக, இன்று பொய்யை மட்டுமே தலைவர்மீது பரப்பி இருக்கிறது.

திமுகவின் பொய்ப் பிரசாரங்களை தனது அமைதியின் மூலம் முறியடித்து மௌனப் புரட்சியை தலைவர் செய்திருக்கிறார். 2026இல் இந்த சூழ்ச்சியை அவர் தூக்கியெறிவார்.
பொதுச்செயலாளர் ஓடி விட்டார். நிர்மல் குமார் ஓடி விட்டார் என்கிறார்கள். யார் ஓடியது? கலைஞரை கைது செய்த போது அவரின் மகன் ஓடினாரே? வரலாற்றை நாங்கள் பேசட்டுமா?
10 வருடங்களுக்காக திமுகவிற்கு வேலை பார்த்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
திமுகவிற்கு ஆதரவளித்த விஜய்
2021 தேர்தலின் போது கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து தலைவர் உங்களுக்கு ஆதரவு கொடுத்தாரே? அதற்கு நன்றி இல்லையா? தைரியம் இருந்தால் என் தலைவர் மீது கை வையுங்கள் பார்ப்போம்.

முடிந்தால் முதலில் அவரின் வீட்டிற்கு செல்லுங்கள். அப்போது ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வந்து நிற்பார்கள்.
இந்தக் குடும்பம் மட்டும்தான் 100 ஆண்டுகள் ஆள வேண்டும் என்ற எண்ணம். பெரிய நடிகர்களெல்லாம் ரெட் ஜெயன்ட்டில் கையெழுத்திட்டு விட்டார்கள்.
தலைவர் நினைத்திருந்தால் ரெட் ஜெயன்ட் மூலம் 500 கோடி ரூபாய் சம்பாதித்திருக்க முடியும். 5 வருடத்துக்கு முன்பு மாற்றம் என பேசிய நடிகரெல்லாம் இப்போது இவர்களின் ரெட் ஜெயன்ட்டில் கையெழுத்தை போட்டு இணைந்துவிட்டார்" என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |