திமுக எம்.பியின் ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் - சட்டமன்றத்தில் சொன்ன அமைச்சர்
minister aadhav arjuna satys2 IUML mla's hostage in dmk mp hotel: 2 IUML எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது என சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
ஹொட்டலில் அடைத்து மிரட்டப்பட்ட 2 எம்.எல்.ஏ.க்கள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாருக் பாஷா, "திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களை திமுகவினர் மிரட்டி கோடி கோடியாக பணம் கொடுப்பதாகவும் அமைச்சர் பதவி கொடுப்பதாகவும் கூறினர் என நான் கூறியதை திமுகவினர் திரித்து, தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி வருகிறார்கள்.

நான் யாரையும் தவறாக பேசவில்லை. மே 7ஆம் தேதி அதிமுக தலைவரை முதல்வராக்க திமுக திட்டமிட்டிருந்தது. அதை எங்கள் தலைவர் காதர் மொய்தீன் ஏற்க மறுத்தார். அவர் பேட்டியில் சொன்னதைதான் நான் எங்கள் கட்சி கூட்டத்தில் சொன்னேன்" என பேசினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் ஷாஜகான், "இந்த விவகாரத்தில் அதிமுகவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. மே 7 ஆம் திகதி, அதிமுக தலைவரை முதல்வராக்கலாம் என திமுகவினர் முடிவு செய்து எங்கள் தலைவர் காதர் மொய்தீனிடம் சொன்னது.
அப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக ஆட்சி செய்ய ஆதரிக்க மாட்டோம் என எங்கள் தலைவர் சொன்னார்.

இதையடுத்து முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் மே 8ஆம் தேதி ஒரு ஹொட்டலில் அடைத்து வைத்திருந்தார்கள். எங்களை அடைத்து வைத்தது யார்? மிரட்டி காவல் காத்தது யார், நாங்கள் வெளிப்படையாக பேசினால் யாருமே அரசியல் செய்ய முடியாது. ஆளுநர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதால்தான் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம்" என பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "IUML எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைக்கப்பட்ட ஹொட்டல் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுடையது. 2 எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தது குறித்து விசாரணை நடத்தப்படும்" என் பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |