அல்லாஹ்வுக்கு தெரியும்! சர்ச்சையை கிளப்பிய பாகிஸ்தான் வீரரின் இடுகை
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அமீர் ஜமால் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட பின் ரகசிய இடுகையைப் பகிர்ந்தது சர்ச்சையாகியுள்ளது.
உள்பதற்றம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்தம் தொடர்பில் உள்பதற்றம் நிலவி வருகிறது.
பாபர் அஸாம், முகமது ரிஸ்வான் போன்ற முக்கிய வீரர்கள் A பிரிவில் இருந்து தரமிறக்கப்பட்டு B பிரிவில் சேர்க்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம்.
பாகிஸ்தான் அணியின் தோல்விகளைத் தொடர்ந்து வாரியம் சில கடுமையான மாற்றங்களை செய்ததால், சமீபத்திய மத்திய ஒப்பந்தம் புதிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
அதில் 2025-26 சீஸனின் ஒப்பந்தத்தில் இருந்து ஏழு பெரிய பெயர்களுடன், டெஸ்ட் ஆல்ரவுண்டர் வீரர் அமீர் ஜமாலும் நீக்கப்பட்டார்.
ரகசிய இடுகை
இதனைத் தொடர்ந்து அவர் பதிலடி கொடுக்கும் வகையில், தன்னை வாரியம் விடுவித்ததை சுட்டிக்காட்டி ரகசிய இடுகையை பகிர்ந்தார்.
அதில் அவர், "அவர்கள் உங்களை புரிந்துகொள்ளட்டும், அவர்கள் பேசட்டும், அல்லாஹ்வுக்கு தெரியும் மற்றும் அவர் உங்களுக்காக பேசும்போது, உங்களது மௌனம் உங்களது கேடயமாக மாறும்" என கூறியிருந்தார்.
ஆமிர் ஜமாலின் இந்த இடுகையும் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |