பிரபல நடிகர் ஆமீர்கானின் மிரள வைக்கும் சொத்து மதிப்பு
பாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வரும் நடிகர் ஆமிர் கானின் சொத்து மதிப்பு குறித்து காண்போம்.
ஆமிர் கான்
இந்தி திரையுலகை அமிதாப் பச்சனுக்கு பிறகு ஆள்வது "கான்" நடிகர்கள்தான். ஷாரூக், சல்மான் மற்றும் ஆமிர் ஆகிய மூவருக்கும் இடையே தான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் போட்டி நிலவும்.
இவர்களில் 2,000 கோடி வசூல் படத்தை கொடுத்தவர் ஆமிர் கான். இவரது "தங்கல்" உலகளவில் சக்கைப்போடு போட்டு தோராயமாக 2,070 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது.
இதன்மூலம் நம்பர் 1 வசூல் நாயகனாக இருக்கும் ஆமிர் கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
குழந்தை நட்சத்திரமாக 1973யில் அறிமுகமான இவர், பின்னர் துணை இயக்குநராக பணியாற்றி 1988யில் வெளியான "கியாமத் சே கியாமத் தக்" படத்தின் மூலம் ஹீரோவானார்.
அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து ஆமிர் கான் பாலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்தார். இவரது கேரியரில் கஜினி திரைப்படம் முதல் 100 கோடி வசூல் செய்த படமாக அமைந்தது.
அதன் பின்னர் 3 இடியட்ஸ், தூம் 3, பிகே, தங்கல் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.
சொத்து மதிப்பு
ஆமிர் கானின் சொத்து மதிப்பு ரூ.1,862 கோடி என மதிப்பிடப்படுகிறது. பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்புர், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-600, பிஎம்டபுள்யூ 6 மற்றும் ரேன்ஞ் ரோவர் வேக்யூ ஆகிய கார்களை வைத்துள்ளார். இவற்றின் மதிப்பு 25 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், மகாராஷ்டிராவின் பன்ச்கனியில் பார்ம்ஹவுஸும், மும்பையின் பந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பும் ஆமீர் கானுக்கு உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |