அறிமுக உலகக்கிண்ண போட்டியிலேயே ஜாம்பவானின் சாதனையை எட்டிப்பிடித்த வீரர்
அமெரிக்க அணி வீரர் ஆரோன் ஜோன்ஸ் கனடாவுக்கு எதிரான உலகக்கிண்ண போட்டியில் அபார சாதனை படைத்தார்.
அமெரிக்க அணி
டி20 உலகக்கிண்ண போட்டித் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் கனடா அணி நிர்ணயித்த 195 ஓட்டங்கள் இலக்கினை அமெரிக்க அணி 18 ஓவரில் எட்டியது.
இதன்மூலம் டி20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களை சேசிங் செய்த அணிகளின் சாதனைப் பட்டியலில் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை பின்னுக்கு தள்ளியது.
ஆரோன் ஜோன்ஸ்
இங்கிலாந்து அணி 230 ஓட்டங்கள் இலக்கை சேஸ் செய்து முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (208) இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா (197) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அதேபோல் 3வது விக்கெட்டில் அதிக ஸ்கோர் (131) எடுத்த அணிகள் பட்டியலில் அமெரிக்கா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்து 152 ஓட்டங்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளது.
40 பந்துகளில் 94 ஓட்டங்கள் விளாசிய அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் (Aaron Jones), 10 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் ஜாம்பவான் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |