2027 ஐபிஎல் ஏலத்திற்கு பெயரை பதிவு செய்துள்ள சேவாக் மகன் ஆர்யவீர்
aaryavir sehwag register for 2027 ipl auction: 2027 ஐபிஎல் ஏலத்திற்கு சேவாக் மகன் ஆர்யவீர் சேவாக், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னர் உட்பட 1220 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
2027 ஐபிஎல் மினி ஏலம்
2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16 ஆம் திகதி கோவாவில் நடைபெற உள்ளது.
இந்த ஏலத்தில், 25 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 66 வீரர்களை 10 அணிகளும் சேர்ந்து மொத்தமாக வாங்க முடியும்.

இதில், பங்குபெறுவதற்காக 939 இந்திய வீரர்கள், 17 நாடுகளைச் சேர்ந்த 281 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1220 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதி வீரர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய வீரர்கள் யார் என்பதை 10 அணிகளும் இப்போது சமர்ப்பிக்கும். இறுதி ஏலப் பட்டியல், வீரர் தொகுப்புகளுடன் சேர்த்து, டிசம்பர் 4 ஆம் திகதி வெளியாகி உள்ளது.
இதில், இதுவரை விளையாடாத வீரர்களில், 925 பேர் இந்தியர்கள் ஆவர். 127 பேர் முந்தைய ஐபிஎல் தொடர்களில் விளையாடியவர்கள் ஆவர்.
இதில் 184 பேர் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள், 170 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள், அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 42 வீரர்கள், முந்தைய ஐபிஎல் தொடர்களில் விளையாடிய 127 இந்திய வீரர்கள், 798 இந்திய வீரர்கள் மற்றும் 69 சர்வதேச போட்டிகளில் வீரர்கள் ஆவார்கள்.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக அவுஸ்திரேலியாவிலிருந்து 53 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து 40 பேரும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து 36 பேரும் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
நியூசிலாந்திலிருந்து 25 வீரர்களும், ஆப்கானிஸ்தானிலிருந்து 23 வீரர்களும், இலங்கையிலிருந்து 21 வீரர்களும், இங்கிலாந்திலிருந்து 16 வீரர்களும், வங்கதேசத்திலிருந்து 12 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
அசோசியேட் நாடுகளில், அமெரிக்கா அதிகபட்சமாக 13 வீரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஆர்யவிர் சேவாக்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத்தில் இந்திய அணியில் அதிரடியாக ஆடி கவனம் பெற்ற முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக் தனது பெயரை ரூ.30 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு பதிவு செய்துள்ளார்.

இந்திய U19 அணியின் அணித்தலைவர் லக்ஷ்யா ராய்ச்சந்தானி மஜூன்ஹனால் வீரர் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வே டிராவிட் ஆகியோரின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.
கடைசியாக 2023 ஆம் ஆண்டில் CSK அணிக்காக விளையாடிய இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் பென்ஸ்டோக்ஸ், அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு தனது பெயரை பதிவு செய்துள்ளார்.