அதிரடி காட்டிய குசால் மெண்டிஸ்..மிரள வைத்த 20 வயது வீரர்
கல்ஃப் ஜெயெண்ட்ஸ் அணிக்கு எதிரான ILT20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் 157 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
குசால் மெண்டிஸ்
துபாயில் நடந்து வரும் சர்வதேச லீக் டி20 போட்டியில் கல்ஃப் ஜெயெண்ட்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
A promising innings comes to an end! ⛓️💥
— International League T20 (@ILT20Official) December 10, 2025
Young Aayan Afzal Khan makes immediate impact, breaking a threatening partnership and sending Kusal Mendis back to the hut. 💪#DPWorldILT20 #AllInForCricket #WhereTheWorldPlays pic.twitter.com/Zl4wmtkx6f
முதலில் களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் கோஹ்லர்-கேட்மோர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, குசால் மெண்டிஸ் மற்றும் சார்லஸ் அதிரடி காட்டினர்.
குசால் மெண்டிஸ் (Kusal Mendis) 15 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆயன் கான் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
ஆயன் கான்
அடுத்து 36 ஓட்டங்களில் சார்லஸ் ஆட்டமிழக்க, ஷுபம் ரஞ்சனே 17 ஓட்டங்களும், டிம் டேவிட் 19 ஓட்டங்களும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டிவைன் பிரிட்டோரியஸ் (Dwaine Pretorius) 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் விளாச ஷார்ஜா அணி 157 ஓட்டங்கள் எடுத்தது.
அபாரமாக பந்துவீசிய ஆயன் கான் (Aayan Khan) 3 விக்கெட்டுகளும், மார்க் அடைர் 2 விக்கெட்டுகளும், டாவ்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |