46 பந்தில் 123 ரன்! 41 வயதில் அனல் பறந்த ஏபிடி-யின் ஆட்டம்
அவுஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஏபி டி வில்லியர்ஸ் 123 ஓட்டங்கள் விளாசினார்.
ஏபி டி வில்லியர்ஸ்
லெஜெண்ட் உலக சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில், அவுஸ்திரேலியா சாம்பியன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.
ஜேஜே ஸ்மட்ஸ் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (AB de Villiers) கூட்டணி அவுஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தது.
வாணவேடிக்கை
வாணவேடிக்கை காட்டிய டி வில்லியர்ஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னரும் சிக்ஸர்மழை பொழிந்த அவர், 39 பந்துகளில் சதம் விளாசி அலறவிட்டார்.
மொத்தம் 46 பந்துகளில் எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 123 ஓட்டங்கள் குவித்தார்.
டி வில்லியர்ஸ் 41 வயதில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |