ABHA Card: ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவம் பார்க்கலாம்
ABHA Card-யை பயன்படுத்தி நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
மருத்துவ காப்பீடு திட்டம்
மக்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவ சிகிச்சை இன்றியமையாதது. ஆனால், அதற்கான மருத்துவ செலவு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அதற்காக பல திட்டங்கள் மற்றும் இலவசங்களை அரசு கொண்டு வருகிறது.
இதன் மூலம் சமுதாயத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரும் பயன்பெறுவதே அரசின் நோக்கமாகும்.
அதன்படி, சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்தி ஏழை மக்களும் லட்சக்கணக்கில் இலவசமாக மருத்துவ சேவையை பெற இந்திய அரசு திட்டங்கள் கொண்டு வருகிறது.
அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத் என்று அழைக்கப்படும் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் (ABHA Card)
இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை (Ayushman Bharat Health Account) இந்திய அரசு 2018 -ம் ஆண்டு தொடங்கியது. இந்த இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்காக ரூ.8,000 கோடிக்கும் மேலாக இந்திய அரசு நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டமானது தேசிய சுகாதார காப்பீடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.
அதாவது, ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.5 லட்ச வரைக்கும் மருத்துவ சேவைகளைப் பெற முடியும். முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள குடும்ப உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே இதன் பலனை பெற முடியும்.
தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துடன் இந்த திட்டம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த இலவச மருத்துவத்தை இந்தியா முழுவதும் 100 -க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் 600 -க்கு மேற்பட்ட தனியார் மருத்துவமனையில் பெற முடியும்.
என்னென்ன தகுதிகள்?
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்காக சில தகுதிகள் மற்றும் அளவுகோல்கள் உள்ளது. இந்த திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இணைக்க வேண்டும்.
அதோடு, சமூக பொருளாதார மற்றும் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு (SECC) 2011 -ல் சேர்க்கப்படவும் வேண்டும்.
என்ன பலன்கள்?
* ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடியவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
* Ayushman Bharat Health Account Card (ABHA அட்டை) இருந்தால் பணமில்லாமல் சிகிச்சை பலன்களை பெற முடியும்.
* முக்கியமாக பட்டியலிடப்பட்ட மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ பலன்களை பெறலாம்.
* பயனாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நாட்கள் வரையிலான செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
* ஆயுஷ்மான் பாரத் அட்டையை பெற pmjay.gov.in என்ற முகவரி மூலம் ஒன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
* மேலே குறிப்பிட்ட முகவரிக்கு சென்று 'Create ABHA Card' என்பதைக் Click செய்ய வேண்டும்.
* அதில் உங்களது ஆதார் எண் (Aadhar) மற்றும் OTP ஆகியவற்றை பதிவிட்டு, விண்ணப்ப படிவத்தில் கேட்கும் விவரங்களை உள்ளிட வேண்டும்.
* அதில் கேட்க கூடிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
* pmjay.gov.in என்ற முகவரியில் ஆயுஷ்மான் பாரத் அட்டையை (Ayushman Bharat Health) download செய்யலாம்.
* அதில், ’Download Ayushman Card’ என்ற பட்டனை Click செய்து Aadhar எண் மற்றும் OTP -யை உள்ளிட்ட வேண்டும்.
* பின்பு, உங்களது ஆயுஷ்மான் கார்டின் டிஜிட்டல் நகலை சரிபார்த்து download செய்து கொள்ளுங்கள். அதனை நீங்கள் Print out எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |