டெஸ்ட் தொடரில் இருந்து ருதுராஜ் விலகல்: மாற்று வீரரை அறிவித்தது பிசிசிஐ
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் விலகல்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 26ம் திகதி தொடங்கவுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஸ்ரீகர் பரத், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ருதுராஜ் தன்னுடைய விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிமன்யு ஈஸ்வரன்
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மாற்றாக அபிமன்யு ஈஸ்வரன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |