இலங்கைக்கு கடத்த முயன்ற 1000 கோடி மதிப்பிலான போதைப்பொருள்: தமிழகத்தில் 2 பேர் கைது
மியான்மரில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 1000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
சிக்கிய போதைப்பொருள்
மியான்மரில் இருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்த 1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் நேற்று தமிழகத்தில் வைத்து கையும் களவுமாக கைப்பற்றப்பட்டது.
மியன்மாரில் இருந்து கடல் வழியாக மணிப்பூருக்கு கடத்தி வரப்பட்டு அங்கிருந்து தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 56 கிலோ எடை கொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைபற்றபட்ட போதைப்பொருள் மெத்தம்பெட்டமைன் ரகத்தை சேர்ந்தது என்றும், அதன் இலங்கை ரூபாய் மதிப்புக்கு 1000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
2 பேர் கைது
இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்தியாவின் பிரபல கடத்தல்காரர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த போதைப்பொருள்களை இந்தியாவின் மத்திய அரசின் சுங்க துறையின் கீழ் உள்ள டி.ஆர்.ஐயினர் கைப்பற்றியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |