அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி பிடித்து மறுமணம் செய்து வைத்த மகன்கள்: ஏன்?

Tamil nadu Wedding Marriage Viral Photos
By Thiru Dec 23, 2023 10:13 AM GMT
Report
Courtesy: BBC Tamil

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த தாய்க்கு அவருடைய மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர், இவரது தாயின் பெயர் செல்வி.  பாஸ்கர் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது, அவரது தம்பி விவேக் 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்துள்ளார், அப்போது அவரது தந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மனைவி செல்வி தன்னுடைய பாஸ்கர் மற்றும் விவேக் ஆகிய இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்துள்ளார்.

2 sons arranged the Second marriage for his mother Selvi in Tamilnadu kallakurichi, அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி பிடித்து மறுமணம் செய்து வைத்த மகன்கள்: ஏன்?BBC Tamil

கல்லூரி முடித்து வேலைக்காக வெளியே சென்ற போது, அவரிடம் புத்த வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது, அப்போது பெரியார், கலைஞர் ஆகியோரின் மறுமணம் குறித்த புத்தகங்களை அதிகமாக படிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் புத்த வாசிப்பு மூலம் நண்பர்கள் பெருகியதுடன் அவரது சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே சென்றுள்ளது. இதற்கிடையில் நம் வீட்டிலும் அம்மா தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்க கூடாது என்ற எண்ணம் பாஸ்கருக்கு வந்துள்ளது.

இதற்கு அண்ணன் பாஸ்கரை அப்படியே பின்பற்றும் தம்பி விவேக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இருவருக்கும் இந்த பேச்சை எவ்வாறு அம்மாவிடம் தொடங்குவது என்று தெரியாமல் இருந்துள்ளனர்.

2 sons arranged the Second marriage for his mother Selvi in Tamilnadu kallakurichi, அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி பிடித்து மறுமணம் செய்து வைத்த மகன்கள்: ஏன்?BBC Tamil

இந்நிலையில் தாய் செல்வி ஒருநாள் தன்னுடைய மகன் பாஸ்கருக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக பேச தொடங்கியுள்ளார். அப்போது விளையாட்டாக நீண்ட நாட்களாக தனியாக நீ கஷ்டப்படுகிறாய், அதனால் நீ முதலில் திருமணம் செய்து கொள் அப்போது தான் நான் பண்ணிக் கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இது குறித்து இரண்டு மகன்களும் தாய் செல்வியிடம் பேசி வந்துள்ளனர்.

2 மகன்களின் சில ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தாய் செல்வி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்த நிலையில், கஷ்டமான காலத்தில் நமக்கு உதவி செய்யாத உறவினர்கள் இப்போது மட்டும் ஏன் அவர்களின் எண்ணங்களை நாம்  கருத்தில் கொள்ள வேண்டும் என நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

பாங்காக்கில் இருந்து விமானத்தில் மலைப்பாம்புகள் கடத்தல்: மும்பை அதிகாரிகளிடம் சிக்கிய நபர்

பாங்காக்கில் இருந்து விமானத்தில் மலைப்பாம்புகள் கடத்தல்: மும்பை அதிகாரிகளிடம் சிக்கிய நபர்

மூத்த மகன் இது தொடர்பாக முதலில் என்னிடம் பேசிய போது அதிர்ச்சியாக இருந்தது, ஊர் என்ன பேசும் என்று அவர்களை கண்டித்தேன், உங்களுக்கு என்று ஒரு துணை இருந்தால் வெளியூரில் வேலை செய்யும் போது நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நாங்கள் அங்கு நிம்மதியாக இருப்போம் என தெரிவித்தனர்.

2 sons arranged the Second marriage for his mother Selvi in Tamilnadu kallakurichi, அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி பிடித்து மறுமணம் செய்து வைத்த மகன்கள்: ஏன்?BBC Tamil

மேலும் இது உங்களை போன்று கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என தெரிவித்தனர். அதே சமயம் நான் கணவரை இழந்த நின்ற போது பலர் அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி என்னிடம் தவறாக நெருங்க அணுகியுள்ளனர்.

திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை. நட்புறவோடு உறுதுணையாக ஒருவர் உங்களுக்கென இருக்கிறார் என்பதே தனி தைரியத்தை வழங்கும்,” என்கிறார் செல்வி.

அம்மாவுக்கு மாப்பிள்ளை பார்த்த மகன்கள் 

இறுதியில் அம்மாவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார், ஆனால் அதற்காக மனைவியை இழந்தவர் யாரையாவது திருமணம் செய்து வைத்து எங்கள் கடமையை முடிக்க நாங்கள் விரும்பவில்லை. என மூத்த மகன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்: நீர் அமைப்புகளை மேம்படுத்த நிதி வழங்கும் உலக வங்கி

தமிழகத்திற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர்: நீர் அமைப்புகளை மேம்படுத்த நிதி வழங்கும் உலக வங்கி

அவருக்காக பார்க்கும் நபர்களிடம் சில நாட்கள் பேசி பழகி பிறகு சம்மதம் என்றால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம் என தெரிவித்தோம். இறுதியில் அம்மாவுக்கு தற்போது மணந்துள்ள அப்பாவை பிடித்து இருந்ததால் அவர்கள் இருவரும் மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.

2 sons arranged the Second marriage for his mother Selvi in Tamilnadu kallakurichi, அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி பிடித்து மறுமணம் செய்து வைத்த மகன்கள்: ஏன்?BBC Tamil

அம்மா செல்வி தற்போது விவசாய தொழிலாளியான ஏழுமலை என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார், அவர் தன்னை அன்பாக பார்த்துக் கொள்வதாகவும், அனைத்து வேலைகளையும் இழுத்து அடித்து கொண்டு செய்வதாக சிரிப்புடன் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US