பாங்காக்கில் இருந்து விமானத்தில் மலைப்பாம்புகள் கடத்தல்: மும்பை அதிகாரிகளிடம் சிக்கிய நபர்
பாங்காக்கில் இருந்து 10க்கும் மேற்பட்ட பாம்புகளை சட்டவிரோதமாக கடத்தி வந்த நபரை மும்பையில் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடத்தி வரப்பட்ட பாம்புகள்
தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து மலைப்பாம்புகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்படுவதாக இந்திய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் புலனாய்வு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இறுதியில் சந்தேகத்திற்குரிய பயணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், பாங்காக்கில் இருந்து அவர் கொண்டு வந்த லக்கேஜ்களை சோதனை செய்தனர்.
அப்போது அவரது லக்கேஜில் 9 அரிய வகையிலான மலைப்பாம்புகளும், மேலும் 2 பாம்புகளையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
பாம்புகளை கடத்தி வந்தவர் கேக் பாக்கெட்களில் பாம்பை மறைத்து வைத்து ஸ்கேனரில் இருந்து தப்பி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சுங்கத் துறை சட்டம் 1962ன் கீழ் பாம்புகளை கைப்பற்றிய அதிகாரிகள் கடத்தல்காரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |