15 பந்தில் 50 ரன் விளாசிய அபிஷேக் ஷர்மா! ஆலன், மிட்சல் வாணவேடிக்கைக்கு தரமான பதிலடி
Abhishek sharma fifty in 15 balls: இந்திய அணிக்கு எதிரான டி20யில் நியூசிலாந்து அணி 198 ஓட்டங்கள் குவித்துள்ளது.
வெல்லிங்டனில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் நியூசிலாந்து 198 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மிட்செல் வாணவேடிக்கை
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி வெல்லிங்டனில் நடந்து வருகிறது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் டிம் செய்பெர்ட் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டெர்ல் மிட்செல் வாணவேடிக்கை காட்டினார்.
மறுபுறம் ஃபின் ஆலன் (Finn Allen) சிக்ஸர் மழை பொழிய, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 25 பந்துகளை எதிர்கொண்ட ஆலன் 5 சிக்ஸர்களுடன் 40 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
அபிஷேக் ஷர்மா அதிவேக அரைசதம்
பின்னர் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் 17 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெவோன் ஜேக்கப்ஸும் அதிரடியில் மிரட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 198 ஓட்டங்கள் குவித்தது.
டேர்ல் மிட்செல் (Daryl Mitchell) 52 பந்துகளில் 89 ஓட்டங்கள் (5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினார். ஜேக்கப்ஸ் 39 (23) ஓட்டங்கள் எடுத்தார். அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 5 ஓவர்களில் 100 ஓட்டங்கள் குவித்து ஆடி வருகிறது. அபிஷேக் ஷர்மா 15 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
