உலகில் அதிக வருமானம் பெரும் விளையாட்டு வீரர் - வரலாறு படைத்த ரொனால்டோ
Cristiano Ronaldo Tops 2.09 Bn dollar Athlete Earnings: கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்றில் எந்த விளையாட்டு வீரரையும் விட தனது விளையாட்டு வாழ்க்கையில் அதிகம் சம்பாதித்துள்ளார்.
கிரிஸ்டியானோ ரொனால்டோ
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, அனைத்து காலத்திலும் உலகின் அதிக வருமானம் பெற்ற விளையாட்டு வீரராக புதிய சாதனை படைத்துள்ளார்.

Forbes வெளியிட்ட சமீபத்திய தரவரிசைப்படி, ரொனால்டோ தனது விளையாட்டு வாழ்க்கையில் சம்பளம், போனஸ் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 2.09 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளார்.
இதன் மூலம் அவர், Tiger Woods (1.97 பில்லியன் டொலர்) மற்றும் தனது நீண்டகால போட்டியாளர் Lionel Messi (1.87 பில்லியன் டொலர்) ஆகியோரை முந்தியுள்ளார்.
ரொனால்டோ 2023-இல் சவுதி அரேபியாவின் Al Nassr கிளப்பில் இணைந்ததிலிருந்து, ஆண்டுக்கு 200 மில்லியன் டொலருக்கும் மேல் சம்பளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 மே மாதம் வரை அவர் 300 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியதாக Forbes கணித்துள்ளது. இந்த சாதனை, விளையாட்டு உலகில் சவுதி அரேபியாவின் முதலீட்டு தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
பொதுவாக, விளையாட்டு வீரர்களின் வருமானம் 20-30 வயதுக்குள் உச்சத்தை எட்டும் நிலையில், ரொனால்டோ தனது 38 வயதிற்குப் பிறகு அதிக வருமானம் ஈட்டியுள்ளார். மேலும், ரொனால்டோ தனது அடுத்த கட்டத்தில் Al Nassr கிளப்பின் உரிமையாளராக மாறும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது, Michael Jordan போல விளையாட்டு வீரர்கள் சம்பளத்தைத் தாண்டி உரிமை மற்றும் முதலீடுகள் மூலம் செல்வத்தை அதிகரிக்கும் புதிய போக்கை காட்டுகிறது.
Forbes கணிப்பின்படி, ரொனால்டோவின் சொத்து மதிப்பு (Net worth) தற்போது 1.2 பில்லியன் டொலர் ஆகும். ஆனால், அவரது வருமானம் மற்றும் சொத்து மதிப்பிற்கு இடையே உள்ள வித்தியாசத்திற்கு கரணம், வரி, முகவர் கட்டணம் மற்றும் செலவுகள் ஆகும்.
இந்த சாதனை, விளையாட்டு உலகில் சம்பளம், விளம்பரங்கள், உரிமை ஆகிய மூன்று வழிகளிலும் செல்வம் உருவாக்கும் புதிய மாதிரியை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |