T20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த அபிஷேக் சர்மா
அதிவேக 1000 ஓட்டங்கள் எடுத்து அபிஷேக் சர்மா உலக சாதனை படைத்துள்ளார்.
Ind vs Aus
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான 5வது T20 போட்டி, இன்று பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 4.5 ஓவர்கள் முடிவில் 52 ஓட்டங்கள் குவித்துள்ளது.
மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா 23 ஓட்டங்களுடனும், சுப்மன் கில் 29 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
அபிஷேக் சர்மா உலக சாதனை
இதில், அபிஷேக் சர்மா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சர்வதேச T20 போட்டிகளில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு, 1,000 ஓட்டங்களை குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
முன்னதாக, அவுஸ்திரேலியா வீரர் டிம் டேவிட் 569 பந்துகளில் 1,000 ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் என்ற இடத்தில் இருந்தார்.

அபிஷேக் சர்மா, 528 பந்துகளில், 1,000 ஓட்டங்களை எட்டி, டிம் டேவிட்டின் சாதனையை முறியடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும், குறைந்த போட்டிகளில் விளையாடி 1,000 ஓட்டங்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அபிஷேக் சர்மா 28 போட்டிகளில் விளையாடி, 1,000 ஓட்டங்களை குவித்துள்ளார். விராட் கோலி 29 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.
ஆனால் இன்னிங்ஸ் அடிப்படையில், 27 இன்னிங்ஸில் 1,000 ஓட்டங்களை குவித்து விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 28 இன்னிங்ஸில் 1,000 ஓட்டங்களை அடித்து 2வது இடத்தில் உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |