ருத்ரதாண்டவமாடிய அபிஷேக் ஷர்மா! டி20யில் இமாலய சாதனை
நாக்பூரில் நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
அபிஷேக் ஷர்மா சிக்ஸர்மழை
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் நடந்தது.
X.com
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (10), இஷான் கிஷண் (8) சொதப்ப, அபிஷேக் ஷர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 22 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) அரைசதம் அடித்தார்.
அவர் 35 பந்துகளில் 84 ஓட்டங்கள் (8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசி ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 25 (16) ஓட்டங்களும், ரிங்கு சிங் 44 (20) ஓட்டங்களும் விளாசினர்.
இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ஓட்டங்கள் குவித்தது. ஜேக்கப் டுஃபி, கைல் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 190 ஓட்டங்கள் எடுக்க, இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 40 பந்துகளில் 78 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்), மார்க் சாப்மேன் 39 (24) ஓட்டங்களும் விளாசினர்.
அதிவிரைவாக 5000 ஓட்டங்கள்
ஆட்டநாயகன் விருதுபெற்ற அபிஷேக் ஷர்மா அதிவிரைவாக 5000 ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற இமாலய சாதனை படைத்தார்.
ஆந்த்ரே ரஸல் 2942 பந்துகளில் 5000 ஓட்டங்களை எட்டிய நிலையில், அபிஷேக் ஷர்மா 2898 பந்துகளிலேயே அதனை முறியடித்தார்.
Associated Press
அதேபோல் அவர் எந்த துடுப்பாட்ட வீரரும் கொண்டிருக்காத 160 அல்லது அதற்குமேல் ஸ்ட்ரைக் ரைட் வைத்துள்ளார்.
அபிஷேக் ஷர்மா 7 முறை 25 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
AFP
X/BCCI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |