ஒரு ஐபிஎல் சிக்ஸரால் ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த உள்ள அபிஷேக் சர்மா?
நடப்பு ஐபிஎல் தொடரில், நேற்று நடந்த ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில், ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, 17 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் உட்பட 34 ஓட்டங்கள் குவித்தார்.
கார் கண்ணாடியை உடைத்த அபிஷேக்
இதில் அவர் அடித்த சிக்ஸர் ஒன்று, மைதானத்தின் பவுண்டரி கோட்டிற்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்தது.
இந்த காரின் தொடரின் முடிவில், அதிக ஸ்ட்ரைக் ரேட் உள்ள வீரருக்கு டாடா நிறுவனம் சார்பில் வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த காரின் கண்ணாடியை உடைக்கும் எந்தவொரு வீரரும் கிராமப்புற கிரிக்கெட் மேம்பாட்டிற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் உபகரணங்களை நன்கொடையாக வழங்க வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.
அதன்படி, அபிஷேக் சர்மா 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்க உள்ளார்.
இது ஐபிஎல்லின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சரான டாடா, கிராமப்புறங்களில் கிரிக்கெட்டை மேம்படுத்தவும் வளர்க்கவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
முன்னதாக LSG மற்றும் SRH க்கு இடையேயான போட்டியில், LSG வீரர் மிட்சேல் மார்ஷ் ஒரு சிக்ஸர் மூலம் கார் கண்ணாடியை உடைத்து இது போன்று ரூ.5 லட்சம் செலுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |