டி20 கிரிக்கெட்டில் படுமோசமான சாதனை செய்த அபிஷேக் ஷர்மா: முதல் இந்திய வீரர்
டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஏழு முறை டக்அவுட் ஆன முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அபிஷேக் ஷர்மா செய்தார்.
அபிஷேக் ஷர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

ஆர்ச்சர் வீசிய பந்தில் பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து அபிஷேக் ஷர்மா வெளியேறினார்.
இதன்மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது இந்த ஆண்டில் அவர் 7வது முறையாக டக்அவுட் ஆகியுள்ளார்.
முதல் இந்திய துடுப்பாட்ட வீரர்
ஒரே ஆண்டில் ஏழு டி20 போட்டிகளில் டக்அவுட் ஆன முதல் இந்திய துடுப்பாட்ட வீரர் அபிஷேக் ஷர்மா ஆவார்.
முன்னதாக சஞ்சு சாம்சன் 2024ஆம் ஆண்டிலும், ரோஹித் ஷர்மா 2018ஆம் ஆண்டிலும் தலா 6 முறை டக்அவுட் ஆகி இருந்தனர்.
2026யில் அபிஷேக் ஷர்மாவைத் தவிர வேறு எந்த துடுப்பாட்ட வீரரும் 5 டி20 போட்டிகளில் டக்அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |