1 மணி நேரத்தில் 45 சிக்ஸர்கள் - வாணவேடிக்கை காட்டிய அபிஷேக் சர்மா
அபிஷேக் சர்மா பயிற்சியின் போது, 1 மணி நேரத்தில் 45 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
அபிஷேக் சர்மா
ஐசிசி T20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா, இந்த ஆண்டில் 100க்கும் அதிகமான சிக்ஸர்கள், T20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 100+ சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

விஜய் ஹசாரே கிண்ணம் டிசம்பர் 24 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 18 ஆம் திகதி வரை நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டியில், பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் அணிகள் விளையாடி வரும் நிலையில், பஞ்சாப் அணித்தலைவர் அபிஷேக் சர்மா, நேற்று அனந்தம் கிரிக்கெட் சிறப்பு மைய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டார்.
1 மணி நேரத்தில் 45 சிக்ஸர்கள்
பயிற்சி தொடங்கிய 10 நிமிடங்களிலே சிக்ஸர்களை பறக்க விட தொடங்கிய அபிஷேக் சர்மா, ஒரு மணி நேரத்தில் 45 சிக்ஸர்கள் விளாசியதாக கூறப்படுகிறது.
சுழற்பந்து வீச்சாளர்கள், ஆஃப்-ஸ்பின், லெக்-ஸ்பின் என மாறி மாறி பந்துவீசிய போதும், கால்களை அதற்கு ஏற்றவாறு மாற்றி, தடுப்பாட்டமே ஆட முயற்சிக்காமல் சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார்.

இதில், குறைந்தது 5 முறை அவர் அடித்த பந்துகள் மைதானத்திற்கு அருகே இருந்த உயரமான கட்டிடத்தின் போர்டிகோவில் சென்று விழுந்தன.
அவர் தொடர்ந்து எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்து ஆடுவதை கவனித்த தலைமை பயிற்சியாளர் சந்தீப் சர்மா, "எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸர்களை மட்டும் அடித்து உங்கள் சதத்தை முடிக்க விரும்புகிறீர்கள்" என கிண்டலாக கூறினார்.

இன்றைய போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய பஞ்சாப் அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு, 269 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதில், அபிஷேக் சர்மா, 26 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |