ஆசிய கிண்ணம் 2025: அனல் பறந்த அபிஷேக் ஆட்டம்., பாகிஸ்தானை மிரட்டிவிட்ட இந்தியா
அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது .
துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ணம் 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது.
172 ஓட்டங்கள் இலக்கை நோக்கி பதிலடி ஆட்டத்தில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா வெறும் 39 பந்துகளில் 74 ஓட்டங்கள் குவித்தது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையவைத்தார்.
அவரது ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் பறந்தன. 24 பந்துகளில் அரைசதத்தை அடைந்தார்.
அபிஷேக்குடன் ஷுப்மன் கில் (47 ஓட்டங்கள், 28 பந்துகள்) இணைந்து 100-க்கும்மேற்பட்ட ஓட்டங்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் இந்திய வீரர்களுடன் சளைக்காமல் சண்டையிட்டனர், ஆனால் இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் 20 ஓவர்களில் 171/5 என்ற மதிப்புமிக்க ஸ்கோரை பதிவு செய்தது. சாஹிப்சாதா பர்ஹான் 58 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் சிவம் தூபே முக்கியமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
போட்டியின் முடிவில் அபிஷேக் ஷர்மா "பாகிஸ்தான் வீரர்கள் காரணமின்றி சண்டையிட்டதால், நான் பதிலடி கொடுக்க வேண்டியிருந்தது" எனக் கூறினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றி பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்ச்சியான 7-வது வெற்றியாகும். இந்தியா தனது சூப்பர் 4 சுற்றில் தொடர்ந்து 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |