ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்திய இராணுவத்தின் அதிரடியான Amogh Fury பயிற்சி
ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்திய இராணுவம் Amogh Fury எனும் அதிரடி பயிற்சியில் மேற்கொண்டுள்ளது.
ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் அமைந்துள்ள மஹாஜன் ஃபீல்டு ஃபயரிங் ரேஞ்சில், இந்திய இராணுவத்தின் சப்த சக்தி கமாண்ட் Amogh Fury என பெயரிடப்பட்ட ஒரு மிகப்பெரிய ஒருங்கிணைந்த தாக்குதல் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சி, பல்வேறு போர்க்கள சூழ்நிலைகளை நேரடியாக எதிர்கொண்டு, இந்திய இராணுவத்தின் தாக்குதல் திறன், ஒத்துழைப்பு மற்றும் செயல்திறனை சோதிக்க வடிவமைக்கப்பட்டது.
இந்த பயிற்சியில், டாங்கிகள், காலாட்படை வாகனங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், நீண்ட தூர துப்பாக்கிகள் மற்றும் ட்ரான்கள் ஆகியவை ஒருங்கிணைத்து செயல்பட்டன.
நிலத்தில் மற்றும் வானில் உள்ள படைகள் ஒரே நேரத்தில் இணைந்து தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திறனை இந்த பயிற்சி வெளிப்படுத்தியது.
Amogh Fury பயிற்சியின் முக்கிய அம்சமாக, network-centric communication, command-and-control architecture, real-time surveillance and targeting systems போன்ற நவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
இது அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே நேரத்தில் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த போர் திட்டத்தை உருவாக்க உதவியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |